செங்கோட்டை அணையில் லீக்: கட்டி 3ஆண்டுகளே ஆகின்றன-செலவு ரூ.62 கோடி!திங்கள்கிழமை, ஆகஸ்ட் 13, 2007 இலவச நியூஸ் லெட்டர் பெற செங்கோட்டை:செங்கோட்டை அருகே மேக்கரையில் ரூ. 62 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அடவி நயினார் கோவில் அணைக்கட்டில் விரிசல் ஏற்பட்டுள்ளது.இந்த அணையின் மூலம் சுமார் 7,000 ஹெக்டேர் நிலம் நீர் பாசனம் பெற்று வருகிறது.இந்த அணையின் முலம் கரிசல் மடை வழியாக வடகரை, மேல்பிடாகை, பண்பொழி, கணக்கப்பிள்ளை வலசை, குத்துக்கல் வலசை, சீவநல்லூர், இலத்தூர், சிவராமபேட்டை, நயினாகரம், இடைகால், ஆய்க்குடி, நெடுவயல், அச்சன்புதூர் ஆகிய 12 கிராமங்களும்,மேட்டுகால் பாசானம் வழியாக வடகரை, கீழ்பிடாகை, அச்சன்புதூர் ஆகிய இரண்டு கிராமங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன.இந்த அணை கட்டப்பட்டு 3 ஆண்டுகள் தான் ஆகின்றன.இந் நிலையில் அணை முழுவதும் தண்ணீர் கசிந்து வருகிறது. அணையும் பராமரிப்பு இல்லாமல் உள்ளது.இந்த அணையின் மேல் தளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள ஏணியின் அருகே அணையின் அடிபகுதியில் ஓட்டை ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வந்து கொண்டுள்ளது.இது குறித்து பலமுறை மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் அணையின் கோட்ட செயற்பொறியாளரிடமும் முறையிடப்பட்டாலும் ஒரு பலனும் ஏற்படவில்லை.மேற்படி துளைகள் பெரிதானால் தண்ணீர் வீணாகி பாசானத்திற்கு பயன்படாமல் போகலாம்.இதனால் இப் பகுதி விவசாயிகள் பாதிக்கப்படலாம்.அணையை இவ்வளவு தரக் குறைவாகக் கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்த ஆரம்பித்துள்ளனர்.நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயிகளை திரட்டி மறியல் போராட்டத்தில் குதிப்போம் என வடகரை சி.பி.ஐ கட்சி கிளைச் செயலாளர் எஸ்.டி.சேக் மைதீன் முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் எச்சரித்துள்ளார்.
இடுகையிட்டது K.K.SANDU VADAKARAI நேரம் 11:35 AM
லேபிள்கள்: வடகரையில் இருந்து ஜந்து கிலோ மீட்டர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக