செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

வடகரை ஜோதிடர் கொலை

தென்காசி : வடகரை ஜோதிடர் கொலை வழக்கில் அவரது மனைவி, மனைவியின் கள்ளக்காதலன் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி அருகே வடகரை இல்லத்தார் தெருவைச் சேர்ந்தவர் குருசாமி (43). ஜோதிடரான இவர் தனியார் நிறுவனத்திற்கு நிலம் வாங்கி கொடுப்பதில் புரோக்கராக செயல்பட்டுள்ளார். குருசாமியை கடந்த மாதம் 29ம் தேதி அதிகாலை 1 மணியளவில் அவரது வீட்டின் முன் ஒரு கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்தது.இச்சம்பவம் குறித்து குருசாமியின் மனைவி பரமேஸ்வரி (30) அச்சன்புதூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்கு பதிவு செய்தார். இவ்வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை பிடிக்க டி.ஐ.ஜி.கண்ணப்பன், எஸ்.பி.ஆஸ்ரா கர்க் உத்தரவின் பேரில் தென்காசி டி.எஸ்.பி.மயில் வாகனன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், பீமராஜ், கனகராஜ், ஸ்ரீஜாராணி, முருகானந்தம் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினரின் தீவிர விசாரணையில் ஜோதிடர் குருசாமி கொலையில் அவரது மனைவி பரமேஸ்வரி உட்பட 7 பேர் சம்பந்தப்பட்டது தெரிய வந்தது.
இதுபற்றிய விபரம் வருமாறு:ஜோதிடர் குருசாமிக்கு பல பெண்களுடன் பழக்கம் இருந்துள்ளது. தனியார் நிறுவனத்திற்கு நிலம் வாங்கி கொடுத்த வகையில் அவருக்கு அதிக பணம் கிடைத்துள்ளது. இதனால் அவர் மது, மங்கை என ஊதாரித்தனமாக செலவு செய்துள்ளார். மேலும் சில திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளார். குருசாமி தனது அக்காள் மகள் பரமேஸ்வரியை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு பெண், இரண்டு மகன்கள் உள்ளனர்.குருசாமி தனது மனைவியை அடிக்கடி சந்தேகப்படுவாராம். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. கணவரின் சந்தேகப்பார்வையால் பரமேஸ்வரி மன வேதனையடைந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு திருமண வீட்டில் பரமேஸ்வரி செங்கோட்டை கதிரவன் காலனியை சேர்ந்த ஆறுமுகம் மகன் ரவிசங்கர் (24) என்பவரை சந்தித்துள்ளார். இருவருக்கும் அப்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணவரின் கொடுமை பற்றி ரவிசங்கரிடம் பரமேஸ்வரி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: